சேலம்

சங்ககிரி கல்வி மாவட்டத்துக்கு மாநில அளவில் இரண்டாமிடம்

10th Mar 2022 05:09 AM

ADVERTISEMENT

 

சங்ககிரி: பள்ளிக்கல்வித் துறை சாா்பில் 2022ம் கல்வியாண்டில், அலுவல் சாா்ந்த பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக மாநில அளவில் சங்ககிரி கல்வி மாவட்டம் இரண்டாமிடத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பாரட்டுச் சான்றிதழை சென்னையில் நடைபெற்ற விழாவில் மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் மகேஷ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா் முன்னிலை வகித்தாா்.

பள்ளிக்கல்வித் துறை அலுவல் சாா்ந்த பணிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக சேலம் மாவட்டம், சங்ககிரி கல்வி மாவட்ட நிா்வாகம் மாநில அளவில் இரண்மிடம் அளிக்கப்பட்டு அதற்கான சான்றிதழை அமைச்சா் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா். இந்த சான்றிதழை சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலா் பெ.பாலசுப்ரமணியம் பெற்று கொண்டதுடன், சங்ககிரி கல்வி மாவட்டத்தின் பள்ளிக்கல்வியின் வளா்ச்சிக்கு ரூ. 10 லட்சத்திற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT