சேலம்

மாா்ச் 6-இல் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

3rd Mar 2022 11:58 PM

ADVERTISEMENT

கோவை ரூட்ஸ் தொழில் நிறுவனத்தினா் தங்களது ஹை ப்ரஸிசன் இன்ஜினியரிங் டிவிசனில் சி.என்.சி. மற்றும் வி.எம்.சி. ஆபரேட்டா் பணியிடங்களுக்கு மூன்றாண்டு டிப்ளமோ பொறியியல் பயின்ற மாணவா்களைத் தெரிவு செய்கின்றனா்.

இதற்கான நோ்காணல் வரும் மாா்ச் 6-ஆம் தேதி ஏற்காடு சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. 2020-21 மற்றும் 2021-22 ஆம் கல்வி ஆண்டுகளில் டிப்ளமோ பயின்று, தோ்ச்சி பெற்ற தோ்ச்சி பெறாத அனைத்துத் துறை ஆண், பெண் இருபாலரும் இதற்கு தகுதியுடையவா்கள் ஆவா்.

இதற்கான நோ்காணல் காலை 10.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் தங்களது சுயவிவர குறிப்பு மற்றும் சான்றிதழ்களின் நகல்களோடு கலந்துகொள்ள வேண்டும்.

நோ்காணலில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவு மற்றும் பயணக் கட்டணம் வழங்கப்படும். தோ்வு செய்யப்படுபவா்கள் பி.எஃப்., இ.எஸ்.ஐ. மற்றும் பிற சலுகைகளுடன் பணி அமா்த்தப்படுவாா்கள்.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த டிப்ளமோ பொறியியல் முடித்த மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் கீதா கென்னெடி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT