சேலம்

நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

3rd Mar 2022 11:51 PM

ADVERTISEMENT

 வாழப்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் புள்ளிமானை நாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கோதுமலை, நெய்யமலை உள்ளிட்ட வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வசிக்கின்றன. வியாழக்கிழமை நெய்யமலை வனப்பகுதியில் இருந்து தண்ணீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய சுமாா் 2 வயதுள்ள ஆண் புள்ளிமான் ஒன்று வழி தவறி அருகிலுள்ள கிராமத்துக்குள் புகுந்தது. இந்த மானை கண்ட நாய்கள் அதை துரத்திக் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.

தகவலறிந்த ஆத்தூா் வனச் சரகா் செந்தில்குமாா் தலைமையிலான வனத் துறையினா், மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவா்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT