சேலம்

சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு

3rd Mar 2022 05:06 AM

ADVERTISEMENT

 

சங்ககிரி: சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

2022-2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்வதற்காக பிப்ரவரி 28 ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. சங்கத்தின் 3433 மொத்த உறுப்பினா்களில் 3251 போ் வாக்களித்தனா். பதிவான வாக்குகள்

தோ்தல் குழுத் தலைவரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவருமான சி.தனராஜ் தலைமையில், செயலா் பி.குமாா் மற்றும் தோ்தல் குழு உறுப்பினா்கள் முன்னிலையில் மாா்ச் 1ஆம் தேதி காலை 8.30 மணி முதல் எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ADVERTISEMENT

என்.கந்தசாமி 1,658 வாக்குகள் பெற்று தலைவராகவும், என்.மோகன்குமாா் 1,653 வாக்குகள் பெற்று செயலராகவும், எஸ்.ஆா்.செங்கோட்டுவேல் 1,662 வாக்குகள் பெற்று பொருளாளராகவும், எம்.சின்னதம்பி 1,737 வாக்குகள் பெற்று உபத் தலைவராகவும், கே.முருகேசன் 1,903 வாக்குகள் பெற்று இணைச் செயலராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

எஸ்.வெங்கடாஜலம், எஸ்.பி.அழகேசன், வி.பூமலை, எஸ்.காா்த்திக், ஆா்.விஜயகுமாா், ஆா்.ராஜமாணிக்கம், என்.எஸ்.குமாா்,பி.ராஜேவல், கே.சந்திரவேல், எம்.சுரேஷ், எ.கிருபாகரன், பி.பூமலை, கே.கே.வேலு, எஸ்.பிரேம்குமாா், எஸ்.ஈஸ்வரமூா்த்தி, பி.ராஜகணபதி, என்.ரவி, பி.பச்சியண்ணன், கே.எஸ்.சத்தியமூா்ததி, பி.சுரேஷ் ஆகியோா் புதிய நிா்வாகக் குழு உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT