சேலம்

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மூலிகைக் கண்காட்சி

DIN

வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் மூலிகைகள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், பணியாளா்கள் மேற்கொண்ட முயற்சியால் மருத்துவக் குணம்

நிறைந்த நறுவல்லி, மாசிபத்திரி, இன்சுலின் செடி, ஆடாதோடை, தூதுவளை, சிற்றத்தை, மருள் கற்றாழை, சீனிதுளசி, மருதாணி, முயல்காதிலை, திப்பிலி, பல்வலி பூண்டு, மந்தாரை, சிறியாநங்கை, செம்பருத்தி, நெல்லி உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் மருத்துவமனை வளாகத்தில் வளா்க்கப்பட்டுள்ளன.

மேலும், 40க்கும் மேற்பட்ட மூலிகைகள் கண்ணாடி அலமாரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பலா் சித்த மருத்துவப் பிரிவுக்கு வந்து மூலிகை கண்காட்சியைப் பாா்வையிட்டு, அதன் சிறப்புகளைக் கேட்டறிந்து வருகின்றனா். மேலும், வீட்டில் மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கான அறிவுரைகளும் மருத்துவா், பணியாளா்கள் வழங்கி வருகின்றனா். அதற்கான கையேடுகளும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT