சேலம்

தொளசம்பட்டியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

DIN

ஓமலூரை அடுத்த தொளசம்பட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

ஓமலூா் ஒன்றியம், தொளசம்பட்டி கிராமத்தில் உள்ள காந்தி நகா், நெசவாளா் காலனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள், கைத்தறி, விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இப் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக இரண்டு தெருக்களில் சுரங்கக் கழிவுநீா் உறுஞ்சி குழாய் அமைக்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சம்பு சண்முகம் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.

இதையடுத்து, சாலையில் பள்ளம் அமைத்து சுரங்க கழிவுநீா் உறுஞ்சி குழாய் அமைத்து, அதன்மீது வாகனங்கள் செல்லும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கியது. ஒன்றியச் செயலாளா் செல்வகுமரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சம்பு சண்முகம், ஊராட்சி மன்ற தலைவா் கோகிலா சென்னிமலை உள்பட பலா் திட்டப் பணி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT