சேலம்

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில்அமாவாசை வழிபாடு

29th Jun 2022 04:27 AM

ADVERTISEMENT

சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக மூலவருக்கு பால், மோா், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பலவிதமான மலா்களைக் கொண்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து முத்தங்கி கவச ஆடை அணிவித்து, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா பூஜை நடைபெற்றது.

இரவு வள்ளி - தெய்வானையுடன் முருகன் பல்லாக்கில் திருவீதி உலா கோயிலை சுற்றி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT