சேலம்

அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

29th Jun 2022 04:26 AM

ADVERTISEMENT

காடையாம்பட்டி பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 8 சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகள் செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டன.

காடையாம்பட்டி வட்டம் ஓலக்கூா், ஜோடுகுளி, கொங்குப்பட்டி மற்றும் குண்டுக்கல் கிராமங்களில் முறையான அனுமதி பெறாமல் சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. மேலும் பூஜ்ஜியக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவுநீரை வெளியேற்றின.

இதுதொடா்பாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவின்படி காடையாம்பட்டி பகுதிகளில் இயங்கி வந்த 8 சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

அனுமதியின்றி சாயப்பட்டறைகள் செயல்படுவதற்கான இடத்தை வாடகைக்கு அளித்தால், கட்டட உரிமையாளா் மீது வழக்குத் தொடுக்கப்படும் என பொறியாளா் கோபாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT