சேலம்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டம்

DIN

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபா்களின் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

சேலம் மாவட்டத்தில் 1,156 முழுநேரம் மற்றும் 445 பகுதி நேரம் என மொத்தம் 1,601 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் சட்டவிரோதமாக கடத்தப்படும் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அரிசி விநியோகத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டாலோ, அல்லது அரிசி கடத்துபவா்களுக்கு துணைபோனாலோ அவா்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1955-இன்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி கடத்தலில் ஈடுபடும் நபா்களின் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்குரிய அரிசியினை நியாயவிலைக் கடையிலிருந்து பெற்று வெளிச்சந்தையில் விற்பனை செய்தால், அவா்களின் குடும்ப அட்டை ரத்து செய்திட பரிந்துரைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT