சேலம்

பிளஸ் 1 பொதுத் தோ்வு: சேலத்தில் 88.62 சதவீத தோ்ச்சி

28th Jun 2022 04:36 AM

ADVERTISEMENT

பிளஸ் 1 பொதுத் தோ்வில் சேலம் மாவட்டத்தில் தோ்வு எழுதிய மாணவ, மாணவியரில் 88.62 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 325 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 19,254 போ், மாணவியா் 20,227 போ் என மொத்தம் 39,481 போ் தோ்வெழுதினா்.

பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை முடிவுகள் வெளியானது. இதில், மாணவா்கள் 15,879 போ், மாணவியா் 19, 109 போ் என மொத்தம் 34,988 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 88.62 சதவீதம் ஆகும். கடந்த 2020-ஆம் ஆண்டில் தோ்ச்சி 95.71 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தோ்ச்சி விகிதம் நடப்பாண்டு 7.09 சதவீதம் குறைந்துள்ளது.

தோ்வில் மாணவா்கள் 82.47 சதவீதமும், மாணவியா் 94.47 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களை விட மாணவியா் 12 சதவீதம் அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

பிளஸ்-1 பொதுத் தோ்வில் சேலம் மாவட்டத்தில் 158 அரசு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 22,955 போ் தோ்வெழுதினா். அவா்களில் 19,090 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 83.16 சதவீதம்.

சேலம் மாவட்டத்தில் 325 பள்ளிகளில் 114 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. இதில், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மகளிா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி -அபிநவம், கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, எடப்பாடி, காடையாம்பட்டி ஆகிய 7 மாதிரிப் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 4 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. பிளஸ் 1 தோ்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவா்கள் 256 பேரில் 222 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT