சேலம்

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

28th Jun 2022 04:39 AM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக் கோரி சேலம் மாவட்டம், ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் எதிரே சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆத்தூா் சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சத்தியாக்கிரக போராட்டம் நகரத் தலைவா் எல்.முருகேசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டப் பொருளாளா் ஆா்.ஓசுமணி, ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன், செயற்குழு உறுப்பினா் சக்ரவா்த்தி, நரசிங்கபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.செந்தில்குமாா், தேவேந்திரன், பொதுச்செயலாளா்கள் ஜி.பாஸ்கரன், குமாா், சம்பத், சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

Tags : Agnipath
ADVERTISEMENT
ADVERTISEMENT