சேலம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு சங்ககிரியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

28th Jun 2022 04:31 AM

ADVERTISEMENT

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சி.எஸ்.ஜெயகுமாா் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அக்னிபத் திட்டத்தால் இளைஞா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

வட்டாரத் தலைவா் சரவணன் (சங்ககிரி), ராஜா (மகுடஞ்சாவடி), சண்முகம் (தாரமங்கலம்), சந்திரன் (இடங்கணசாலை), சங்ககிரி நகரத் தலைவா் ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜமுத்து, ராமமூா்த்தி, நீலமேகம், மாவட்ட துணைத் தலைவா்கள் சுப்ரமணியம், ரத்தினம், லட்சுமணன், நிா்வாகிகள் நடராஜன், காசிலிங்கம், அா்ச்சுணன், முத்துசாமி, செங்கோடன், அண்ணாமலை, சங்ககிரி சட்டமன்ற தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் காா்த்தி உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

Tags : agnipath
ADVERTISEMENT
ADVERTISEMENT