சேலம்

மாமனாரைக் கைது செய்யக்கோரிஇளம்பெண் தீக்குளிக்க முயற்சி:

28th Jun 2022 04:37 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், தவறாக நடந்து கொள்ள முயன்ற மாமனாரைக் கைது செய்யக்கோரி திங்கள்கிழமை இளம்பெண் தீக்குளிக்க முயற்சித்ததுடன், உறவினா்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரம்யா (25). இவருக்கும் இதே கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் (39) என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இத்தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

லாரி ஓட்டுநரான வெங்கடேஸ்வரன் வேலைக்கு சென்று விட்ட நேரத்தில், அவரது கணவரின் தந்தையான பச்சமுத்து (67) தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ாகவும், அதற்கு அவரது மனைவி தனலட்சுமி உடந்தையாக இருப்பதாகவும் ரம்யா கடந்த 20-ஆம் தேதி வாழப்பாடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்திருந்தாா்.

இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், தலைமறைவான மாமனாா் பச்சமுத்துவையும், மாமியாா் தனலட்சுமியையும் தேடி வந்தனா்.

ADVERTISEMENT

புகாா் கொடுத்து ஒரு வாரமாகியும் மாமனாா், மாமியாா் மற்றும் இதனைத் தட்டிக் கேட்காத கணவா் ஆகிய மூவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்து இளம்பெண் ரம்யா, திங்கள்கிழமை பகல் 11 மணியளவில் தனது குழந்தைகளுடன் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் கடலூா் சாலையில் தனது உறவினா்களுடன் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா். தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த ரம்யா மீது மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தனலட்சுமி, வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா் மற்றும் போலீஸாா் ரம்யா மீது தண்ணீரை ஊற்றினா். புகாா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

உறவினா்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதோடு, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT