சேலம்

வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் திருட்டு

28th Jun 2022 04:28 AM

ADVERTISEMENT

கொத்தாம்பாடியில் வழக்குரைஞரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளையும், ரொக்கப்பணத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடியைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடேசன் (45). அவருக்கு பிருந்தா (40) என்ற மனைவியும், அபிநேஷ் (15) என்ற மகனும் உள்ளனா். திங்கள்கிழமை காலை வெங்கடேசன் நீதிமன்றத்திற்குச் சென்று விட்டாா்.

மனைவி பிருந்தா, மகன் அபிநேஷை தட்டெழுத்துப் பயிற்சிக் கூடத்தில் விட்டு, பின்னா் தோட்டத்திற்குச் சென்று விட்டாா். அபிநேஷ் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. மேலும் வீடு திறந்து இருந்ததைக் கண்டு உள்ளே சென்றாா்.

அப்போது வீட்டில் இருந்து முகமூடி அணிந்த இருவா் வெளியில் வந்து அபிநேஷை, இரும்புக் கம்பியால் தாக்க முயன்றனா். பயந்து ஓடிய அபிநேஷ் சத்தம் போட்டதால் முகமூடி அணிந்த இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி விட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அபிநேஷின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த அவா்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 2 பவுன் தங்க நகையையும், ரூ. 7,000 ரொக்கப்பணம், ரூ. 1லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் எம்.ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து முகமூடி நபா்களைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT