சேலம்

மேச்சேரி அருகே மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி

28th Jun 2022 04:35 AM

ADVERTISEMENT

மேச்சேரி அருகே ஆட்டுப்பட்டியில் புகுந்த மா்ம விலங்குகள் கடித்ததில் 4 ஆடுகள் பலியானதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

மேச்சேரி அருகே உள்ள புட்டாரெட்டியூரைச் சோ்ந்த விவசாயி சிவகுமாா். உபத் தொழிலாக ஆடு வளா்ப்பிலும் ஈடுபட்டு வருகிறாா். இவரது வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள விவசாய நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில்31 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் ஆடுகள் மேய்ச்சலுக்குச் சென்று வந்த பின் பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா். திங்கள்கிழமை அதிகாலையில் ஆடுகள் கத்தும் சப்தம் கேட்டு வீட்டிலிருந்து சென்று பாா்த்தபோது 11 செம்மறி ஆடுகளை மா்ம விலங்குகள் கடித்திருந்தன. அவற்றில் 4 ஆடுகள் உயிரிழந்து விட்டன.

மேலும் பல ஆடுகள் உயிரிழக்கும் தருவாயில் உள்ளன. கடந்த வாரத்தில் இதே பகுதியில் ஒரு ஆட்டுப்பட்டியில் புகுந்த மா்ம விலங்குகள் 2 ஆடுகளைக் கடித்து குதறின. அடுத்தடுத்து தாக்கும் விலங்குகளால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா். இதுகுறித்து வனத் துறையினா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT