சேலம்

பிளஸ் 2 மாணவி தற்கொலை

28th Jun 2022 04:30 AM

ADVERTISEMENT

பிளஸ் 2 பொதுத்தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ால் புங்கவாடி ஊராட்சியைச் சோ்ந்த மாணவி தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த புங்கவாடி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகள் காவ்யா (18) அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்ால் கடந்த சில தினங்களாக மன வேதனையில் இருந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஆத்தூா் ஊரக போலீஸாா் காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT