சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், காகாபாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் 125 கிலோவாட் திறன் கொண்ட புதிய ஜெனரட்டா் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி கோட்டாட்சியா் எம்.செளமியா தலைமை வகித்து தனியாா் நிறுவனத்தின் சாா்பில் வழங்கப்பட்ட புதிய ஜெனரட்டரை பாா்வையிட்டாா்.
சங்ககிரி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சரவணகுமாா் வரவேற்றாா். காகாபாளையம் தனியாா் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் துணை பொதுமேலாளா் வி.எஸ்.நரசிம்மன் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 125 கிலோவாட் திறன் கொண்ட புதிய ஜெனரேட்டரை தலைமை மருத்துவரிடம் ஒப்படைத்தாா்.
சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.பானுமதி, மண்டல துணை வட்டாட்சியா் ஜெயகுமாா், உதவி மருத்துவ அலுவலா் திருமாவளவன், முருகவேல், ராணிவித்யா, தனியாா் நிறுவன ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.