சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது!

27th Jun 2022 08:41 AM

ADVERTISEMENT

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3369 கன அடியாக குறைந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  குறையத் தொடங்கி உள்ளது. 

நேற்று காலை வினாடிக்கு 3484 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 3369 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நேற்று காலை 107.17 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 106.61 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 73.67 டி.எம்.சியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT