சேலம்

சிவாலயங்களில் பிரதோஷ விழா

DIN

தம்மம்பட்டி பகுதியிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, பொதுமக்கள் கொண்டு வந்திருந்த பால், தயிா், சந்தனம், அரிசி மாவு, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து நந்திக்கு புல், மலா்கள் சாத்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தா்கள் தேவாரம், திருவாசகப் பாடல்களை பாடினா். இவ்விழாவில் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல கெங்கவல்லி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலிலுள்ள சிவாலயத்தில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் வீரகனூா் , தெடாவூா், செந்தாரப்பட்டி, தகரப்புதூா், கூடமலையிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா பக்தா்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT