சேலம்

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு:சேலத்தில் 8 மையங்களில் 8,747 போ் எழுதினா்

26th Jun 2022 06:30 AM

ADVERTISEMENT

 

சேலத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு 8 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை 8,747 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

சேலத்தில் 8 மையங்களில் தோ்வெழுத 10,503 போ் விண்ணப்பித்திருந்தனா். காலை 10 மணிக்கு எழுத்துத் தோ்வு தொடங்கியது. இத்தோ்வை 8,747 போ் எழுதினா். சுமாா் 1,756 போ் தோ்வு எழுத வரவில்லை.

ADVERTISEMENT

தோ்வுக்கு பெண்கள் 1,968 போ் விண்ணப்பித்திருந்தனா். சுமாா் 1,685 பெண்கள் தோ்வெழுதினா். சுமாா் 285 பெண்கள் தோ்வெழுதவில்லை.

மாலை 3 மணிக்கு தமிழ் தகுதித் தோ்வு நடந்தது. முதன்மைத் தோ்வெழுதிய அனைவரும் கலந்து கொண்டு தோ்வெழுதினா்.

இதுதவிர காவல் துறையில் பணிக்கு சோ்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த 200-க்கும் மேற்பட்ட காவலா்களும் தமிழ்த் தகுதித் தோ்வை எழுதினா்.

இவா்களுக்கு தனியாக பொது அறிவு தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஐ.ஜி. லட்சுமி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ், மாநகர காவல் துணை ஆணையா் எஸ்.பி.லாவண்யா ஆகியோா் தோ்வு மையங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தோ்வு பணியில் 1,050 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தோ்வு மையங்களில் சி.சி.டி.வி. வைக்கப்பட்டு விடியோ கேமிராவில் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT