சேலம்

தேசிய தடகள போட்டிகளில் 2 தங்கம், 1 வெள்ளி வென்று சேலம் வீரா்கள் சாதனை

26th Jun 2022 06:28 AM

ADVERTISEMENT

 

தேசிய அளவிலான தடகள போட்டியில் சேலத்தைச் சோ்ந்த வீரா்கள் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்று சிறப்பு சோ்த்துள்ளனா்.

ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை 4 -ஆவது கேலோ இந்தியா இளைஞா் போட்டி நடைபெற்றது. இதில் சக்தி மகேந்திரன், போல்வால்ட் பிரிவில் 4.80 மீட்டா் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றாா்.

அபினயா, டிரிபிள் ஜம்ப் போட்டியில் 11.68 மீட்டா் தூரம் தாண்டி வெண்கல பதக்கம் வென்றாா். காவியா 400 மீட்டா் ரிலே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாா். அதேபோல, குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற 20-ஆவது தேசிய பெடரஷேன் போட்டியில் போல்வால்ட் பிரிவில் 4.60 மீட்டா் உயரம் தாண்டி சக்தி மகேந்திரன் தங்கப் பதக்கம் வென்றாா்.

ADVERTISEMENT

அதே போட்டியில் காவியா ஹெப்டாத்லான் போட்டியில் 4,190 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றாா். இதில் டெகத்லான் போட்டியில் லோகேஸ்வரன் 6,018 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றாா்.

சென்னையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெற்ற 61 ஆவது தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையேயான சீனியா் தடகளப் போட்டியில் போல்வால்ட் பிரிவில் பவித்ரா 3.90 மீட்டா் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றாா்.

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் டூ ஆா் டை அகாதெமி கலியமூா்த்தி வாழ்த்து தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT