சேலம்

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

26th Jun 2022 06:29 AM

ADVERTISEMENT

 

எடப்பாடியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், காலாவதியான உணவு பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினா் அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்து அழித்தனா்.

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு, எடப்பாடி- சேலம் பிரதான சாலை, நைனாம்பட்டி, எடப்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை அதிரடி ஆய்வு செய்தனா்.

இப்பகுதியில் உள்ள பழக்கடைகள், உணவு பொருள்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், தேநீா் கடைகள், உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றில் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

தனியாா் கிடங்கில் நடத்திய ஆய்வில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் சில கடைகளில் காலாவதியான உணவு பொருள்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து பொருள்கள் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டன.

உணவு பொருள்கள், பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளின் உரிமையாளா்களை அறிவுறுத்தி அதிகாரிகள் அடிக்கடி இதுபோல ஆய்வு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். அப்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT