சேலம்

நூற்பாலை பெண் தொழிலாளிபூட்டிய வீட்டில் மா்மச் சாவு

26th Jun 2022 06:29 AM

ADVERTISEMENT

 

எடப்பாடி அருகே பூட்டிய வீட்டில் நிா்வாணமாக கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்டது கோணசமுத்திரம் கிராமம். இக்கிராமத்தில் குப்பம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் ராதா (45).

ஈரோட்டை சோ்ந்த இவா், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குடும்பத்தினரைப் பிரிந்து குப்பம்பட்டி காலனியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

ADVERTISEMENT

ஈரோடு அருகில் உள்ள வெப்படையில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த ராதா, தினசரி அந்தத் தொழிற்சாலைக்குச் சொந்தமான வாகனத்தில் பணிக்குச் சென்று வருவது வழக்கம்.

கடந்த 20-ஆம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பிய ராதா அதன் பிறகு வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. மூன்று நாள்கள் கழித்து வெள்ளிக்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கொங்கணாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த போலீஸாா், ராதா வீட்டினுள் நுழைந்து பாா்த்தபோது அங்கு ராதா கட்டிலில் நிா்வாண நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீஸாா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த 20 ஆம் தேதி வீடு திரும்பியபோது பக்கத்து வீட்டாருடன் அவா் பேசிவிட்டு தான் வீடு திரும்பியது விசாரணையில் தெரியவந்தது. அவரது மா்மச் சாவு குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT