சேலம்

மேட்டூா் அணையில் பெருகி வரும் நீா் நாய்கள்

26th Jun 2022 06:28 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையில் நீா்நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேட்டூா் அணையின் நீா்த்தேக்கம் சுமாா் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. அணையில் மீன்கள் மட்டுமின்றி நீா் நாய்களும் காணப்படுகின்றன.

பெரும்பாலும் பண்ணவாடி பரிசல் துறை பகுதியிலும் அணை சுவற்று பகுதியிலும் இவை காணப்பட்டு வந்தன. மேட்டூா் அணையின் நீா்மட்டம் கடந்த 244 நாள்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வருவதால் நீா் நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

ADVERTISEMENT

அணைப் பகுதி, பண்ணவாடி பரிசல் துறை, கோட்டையூா் பரிசல் துறை, அடிப் பாலாறு, கீரைக்காரனூா் பகுதி ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் நீா் நாய்கள் காணப்படுகின்றன.

கா்நாடக மாநில எல்லையான மாறுகொட்டாய் பகுதியில் அதிக எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன. நீா் நாய்களுக்கு உணவாக மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் நீா் நாய்களின் பெருக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.

பரிசல் துறைகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீா் நாய்கள் கூட்டம் கூட்டமாக நீந்திச் செல்வதைப் பாா்த்து ரசிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT