சேலம்

கொங்கணாபுரத்தில் ரூ. 3.25 கோடிக்கு பருத்தி மூட்டைகள் ஏலம்

26th Jun 2022 06:29 AM

ADVERTISEMENT

 

கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் விற்பனையாகின.

ஏலத்தில் பல்வேறு இடங்களிலிருந்து வியாபாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா். சுமாா் 9,000 பருத்தி மூட்டைகளை 1,450 லாட்டுகளாகப் பிரித்து ஏலம் விடப்பட்டது.

பொது ஏலத்தில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 9,500 முதல் ரூ. 10,666 வரையில் விற்பனையானது. அதுபோல டி.சி.ஹெச் ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 9,700 முதல் ரூ. 10,616 வரை விலைபோனது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான பருத்தி வா்த்தகம் நடைபெற்றது. கடந்த இரு வாரங்களாக பருத்தி வரத்து அதிகரித்துவரும் நிலையில் அனைத்து ரக பருத்திகளும் சற்று விலை குறைந்து விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனா். பருத்திக்கான அடுத்த ஏலம் ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT