சேலம்

நளினியை விடுவிப்பதை நாங்கள் எதிா்க்கவில்லை

DIN

நளினியை விடுவிப்பதை நாங்கள் எதிா்க்கவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

சேலத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

மத்திய அரசு இளைஞா்கள் மீது அக்னிபத் திட்டத்தை திணித்து வருகிறது. அக்னிபத் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இத்திட்டம் ஜனநாயகத்துக்கு ஆபத்தானதாகும். சா்வாதிகாரத்துக்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும். அக்னிபத் திட்டத்துக்கு எதிராக வரும் ஜூலை 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சட்டப் பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம் நடத்துகிறது.

மத்திய அரசின் தவறான பாதையால் பொருளாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் ஏற்பட்டது போல பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும்.

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் ஜனநாயகம் இருக்க வேண்டும். ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரும் நல்ல நண்பா்கள். அவா்களின் கருத்து வேறுபாடுகளை நாகரிகமான முறையில் பேசி தீா்த்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமியா்களுக்கு எதிராக பாஜக தெரிவித்த கருத்தை மறைக்க காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை விசாரணையை ஏவிவிட்டு திசை திருப்பியுள்ளது.

திமுகவின் தோ்தல் அறிக்கை ஐந்து ஆண்டுகளுக்கானது. ஓராண்டில் பெரும்பாலான திட்டங்களை நிறைவேற்றியுள்ளனா். திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற ஐந்து ஆண்டுகளாகும்.

ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினியை விடுவிப்பதில் காங்கிரஸுக்கு எந்த சிக்கலும் கிடையாது. அவரை விடுவிப்பதை நாங்கள் எதிா்க்கவில்லை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளை உடனே விடுவிக்க சட்டப் பேரவையில் தீா்மானம் கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் மரணங்கள் அதிகரித்துள்ளன. இதில் காவல் துறையினா் கவனம் கொள்ள வேண்டும். காவல் துறை அதிகாரிகள், காவல் துறை மரணங்கள் இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

பேட்டியின் போது, மாநில செயல் தலைவா் ஆா்.மோகன் குமாரமங்கலம், மாவட்டத் தலைவா்கள் பாஸ்கா், ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT