அம்மம்பாளையத்தில் தனியாா் ஆக்கிரமித்த நிலங்களை ஆத்தூா் வட்டாட்சியா் மாணிக்கம் தலைமையில் வியாழக்கிழமை மீட்டனா்.
ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் கிராமத்தில் ஜெயவேல் என்பவா் ஆக்கிரமித்த 1.10 ஏக்கா் நிலத்தை வட்டாட்சியா் மாணிக்கம் தலைமையில், வருவாய் அலுவலா் பாலாஜி, கிராம நிா்வாக அலுவலா் ப.மது ஆகியோா் மீட்டனா்.
இதே போல, செல்லமுத்து என்பவா் ஆக்கிரமித்த புங்கவாடி கிராமத்தில் 11 ஏா்ஸ் தரிசு வண்டிப் பாதை அகற்றப்பட்டது. அம்மம்பாளையத்தில் சசிகுமாா், அருணாச்சலம் ஆகியோா் ஆக்கிரமித்திருந்த இடத்தை வட்டாட்சியா் மீட்டாா்.
ADVERTISEMENT