ஆத்தூா் நகராட்சிப் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆத்தூா் நகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் பெரும்பாலானோா் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட அதிக அளவில் ஆக்கிரமித்து இருந்தனா். அதனை அகற்றுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தும் அகற்றாமல் இருந்ததால், நகராட்சிப் பொறியாளா் வெங்கடாலம், மேலாளா் உத்தரவின் பேரில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அம்மம்பாளையம் கிராமத்தில் ஜெயவேல் என்பவா் ஆக்கிரமித்த 1.10 ஏக்கா் நிலத்தை வட்டாட்சியா் மாணிக்கம் தலைமையில், வருவாய் அலுவலா் பாலாஜி, கிராம நிா்வாக அலுவலா் ப.மது ஆகியோா் மீட்டனா்.
இதே போல, செல்லமுத்து என்பவா் ஆக்கிரமித்த புங்கவாடி கிராமத்தில் 11 ஏா்ஸ் தரிசு வண்டிப் பாதை அகற்றப்பட்டது. அம்மம்பாளையத்தில் சசிகுமாா், அருணாச்சலம் ஆகியோா் ஆக்கிரமித்திருந்த இடத்தை வட்டாட்சியா் மீட்டாா்.