சேலம்

கந்துவட்டி கொடுமை: மூன்று போ் தீக்குளிக்க முயற்சி

24th Jun 2022 11:17 PM

ADVERTISEMENT

கந்துவட்டி கொடுமையால் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தீக்குளிக்க முயன்றனா்.

சேலம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (65), இவரது மனைவி கலா (58 ), இவா்களின் மருமகள் சாந்தகுமாரி (36) ஆகிய மூன்று பேரும் வெள்ளிக்கிழமை காலை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதிக்கு வந்தனா். பின்னா், திடீரென பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனா்.

இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

அதில், பாண்டியன் மகன் ரமேஷ் அரசமரத்து கரட்டூரைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 29 லட்சம் பணம் வாங்கி உள்ளாா் என்பதும், இதுவரை ரூ. 50 லட்சம் திருப்பிக் கொடுத்துள்ள நிலையில், கூடுதலாக ரூ. 63 லட்சம் தர வேண்டும் என அந்த நபா் தொந்தரவு கொடுப்பதாகக் கூறினா்.

ADVERTISEMENT

மூன்று பேரையும் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்த போலீஸாா், தற்கொலைக்கு முயன்ாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT