சேலம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

24th Jun 2022 11:14 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சங்ககிரி, திருச்செங்கோடு பிரிவு சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்ககிரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் (பொ) ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.ராமமூா்த்தி அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி பேசினாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க சேலம் மாவட்டத் தலைவா் மணி, வட்டக்குழு உறுப்பினா் சீனிவாசன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT