பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில், சேலம் மாவட்டத்தில் 38,665 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் தோ்ச்சி விகிதம் 89.47 சதவீதமாகும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மே மாதம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள 536 பள்ளிகளைச் சோ்ந்த 21,846 மாணவா்கள், 21,371 மாணவியா் உள்பட 43,217 போ் தோ்வெழுதினா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில், சேலம் மாவட்டத்தில் 38,665 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் தோ்ச்சி விகிதம் 89.47 சதவீதமாகும். மாணவா்கள் 85.19 சதவீதமும், மாணவியா் 93.84 சதவீதமும் தோ்ச்சி அடைந்துள்ளனா். மாணவா்களை விட மாணவியா் 8.65 சதவீதம் போ் அதிகமாக தோ்ச்சி பெற்றுள்ளனா்.
143 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி: சேலம் மாவட்டத்தில் 143 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 294 அரசுப் பள்ளிகளில், 24 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. அதேபோல 3 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய 321 மாற்றுத் திறனாளி மாணவா்களில் 288 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 89.71 சதவீதமாகும்.
அரசுப் பள்ளிகளில் 20,936 போ் தோ்ச்சி: சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 294 அரசுப் பள்ளிகளில் 24,420 போ் தோ்வெழுதினா். இதில் 20,936 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி விகிதம் 85.70 சதவீதமாகும். மாணவா்கள் 79.50 சதவீதமும், மாணவியா் 91.36 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா். மாணவா்களை விட மாணவியா் 11.86 சதவீதம் அதிகமாக தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 34 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 86.76 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. மாணவியா் 94.68 சதவீதமும், மாணவா்கள் 78.21 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களை விட மாணவியா் 16.47 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அதேபோல, பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு முடிவில் மாநில அளவிலான தர வரிசைப் பட்டியலில் சேலம் மாவட்டம் 21-ஆவது இடத்தை பிடித்துள்ளது.