சேலம்

மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை

21st Jun 2022 02:36 AM

ADVERTISEMENT

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 284 மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், மாற்றுத் திறனாளிகள் வழங்கிய 26 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சு.சத்திய பாலகங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலா் அமுதன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் இரா.மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT