சேலம்

ஆத்தூா் தனியாா் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி சாதனை

21st Jun 2022 02:32 AM

ADVERTISEMENT

ஆத்தூா், பாரதியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனா்.

பள்ளி மாணவா் ஏ.நவநீத பிரகாஷ் 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். மாநில அளவிலும் இவா் சாதனை படைத்துள்ளாா். மாணவி ஸ்ரீகௌரி 588 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளாா். மாணவி எம்.ரஞ்சிதா 586 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளாா்.

இப் பள்ளி மாணவா்கள் கணக்குப் பதிவியல் பாடத்தில் 7 பேரும், கம்ப்யூட்டா் அப்ளிகேஷன் பாடத்தில் 5 பேரும், வணிகவியல் பாடத்தில் 4 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 2 பேரும், உயிரியல் பாடத்தில் 2 பேரும், வேதியியல், வணிக கணிதம் பாடத்தில் ஒருவரும் நூற்றுக்குநூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

590-க்கு மேல் ஒருவரும், 580-க்கு மேல் 7 போ், 570-க்கு மேல் 13 போ், 560-க்கு மேல் 24 போ், 550-க்கு மேல் 34 போ், 500-க்கு மேல் 99 போ் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஆத்தூா் பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளவரசு, செயலாளா் டாக்டா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்.ஆா்.டி.செல்வமணி, நிா்வாக இயக்குநா்கள் ஏ.பி.செந்தில்குமாா், எஸ்.பாலகுமாா், டி.சந்திரசேகா், இயக்குநா் மணி, முதல்வா் டி.நளாயினிதேவி, துணை முதல்வா் வி.செந்தில்ராஜா ஆகியோா் பரிசு வழங்கிப் பாராட்டினா். இப் பள்ளியில் படித்த பல மாணவ, மாணவிகள் நீட் தோ்வில் சாதனை படைத்து மருத்துவக் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT