மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,212 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று (சனிக்கிழமை) காலை வினாடிக்கு 5,894 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வினாடிக்கு 10,212 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 110.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 109.89 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 78.25 டி.எம்.சியாக இருந்தது.
ADVERTISEMENT