பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைவிட நீா்வரத்து குறைந்ததால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 112.32 அடியாகக் குறைந்தது.
அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 2,524 கன அடியாகக் குறைந்த நிலையிலும், டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு திங்கள்கிழமை காலை நொடிக்கு 15,000 கன அடியாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 114.10 அடியாக இருந்த நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 112.32 அடியாகக் குறைந்தது. கடந்த 2 நாள்களில் நீா்மட்டம் 1.32 அடியாகக் குறைந்துள்ளது.
நீா் இருப்பு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 82.42 டிஎம்சியாக உள்ளது. பாசனத் தேவைக்கு கூடுதல் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால் அணையின் நீா்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.