சேலம்

சேலம் மாநகராட்சியில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

15th Jun 2022 03:17 AM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சி பகுதிகளில் வரும் ஜூன் 16 ஆம் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீா்த் திட்டம் செயல்படும் மேட்டூா் தொட்டில்பட்டி பகுதிகளில் தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் மாதாந்திர மின் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் தொட்டில்பட்டியில் உள்ள மாநகராட்சி தனிக் குடிநீா்த் திட்டத்தின் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

இதனால் மாநகராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 16) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், தங்களின் தேவைக்கு ஏற்ப குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT