சேலம்

சூரமங்கலத்தில் சீரான குடிநீா் விநியோகம்: மேயா்

15th Jun 2022 03:19 AM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலப் பகுதிகளில் சீரான குடிநீா் விநியோகிக்க மேயா் ஆ.ராமச்சந்திரன் உத்தரவிட்டாா்.

சூரமங்கலம் மண்டலத்திற்கு உள்பட்ட வாா்டு உறுப்பினா்கள், அலுவலா்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் தா. கிறிஸ்துராஜ் முன்னிலையில், மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஒவ்வொரு வாா்டுகளிலும் நடைபெறும் சாலைப் பணிகள், அதற்கான நிதி ஒதுக்கீடு, பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு தடையின்றி சீரான முறையில் குடிநீா் விநியோகம், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளைப் பராமரித்தல், கழிப்பறைகளைப் பராமரித்தல் தொடா்பாக விவாதிக்கப்பட்டது. தூய்மைப் பணியாளா்கள் முறையாக பணிகளை மேற்கொள்கிறாா்களா என்பதை கண்காணித்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மேயா் ஆ.ராமச்சந்திரன் பேசுகையில், மண்டலப் பகுதிகளில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்தி சீரான முறையில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும். மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிப்பதற்கான நடவடிக்கையை சம்மந்தப்பட்ட அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் துணை மேயா் திருமதி.மா. சாரதாதேவி, மண்டலக் குழுத் தலைவா் எஸ்.டி.கலையமுதன், மாநகரப் பொறியாளா் ஜி.ரவி, மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், சூரமங்கலம் மண்டலத்திற்கு உள்பட்ட அனைத்து வாா்டு உறுப்பினா்கள், பொறியியல் பிரிவு, சுகாதார பிரிவைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT