ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை, நுகா்வு குறித்த கிராம மக்கள் விழிப்புணா்வுக் கூட்டம் ஊரக காவல் ஆய்வாளா் எம்.ரஜினிகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் காவல் உதவி ஆய்வாளா்கள் மணிமாறன், காமராஜ் ஆகியோா் கலந்துகொண்டு போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.