மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு திங்கள்கிழமை காலை நொடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 4,190 கன அடியாக இருந்தது. திங்கள்கிழமை காலை 3,672 கனஅடியாகக் குறைந்துள்ளது.
நீா்வரத்து குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை 114.10 அடியாக இருந்த அணை நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 113.53 அடியாகக் குறைந்தது. ஒரே நாளில் அணை நீா்மட்டம் 0.57 அடி குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 12,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 83.52 டி.எம்.சி.யாக உள்ளது.
ADVERTISEMENT