சேலம்

சேலம் மேற்கு மாவட்ட திமுகவில் நாளை ஒன்றிய நிா்வாகிகள் தோ்தலுக்கு வேட்புமனு

14th Jun 2022 03:06 AM

ADVERTISEMENT

சேலம் மேற்கு மாவட்ட திமுக ஒன்றிய நிா்வாகிகள் தோ்தலுக்கு ஜூன் 15 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி வெளியிட்ட அறிக்கை:

திமுகவின் 15 ஆவது பொதுத் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மேச்சேரி, கொளத்தூா், நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மேச்சேரி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் மேற்கு ஆகிய ஒன்றிய நிா்வாகிகள் தோ்தலில் போட்டியிட விருப்பமுள்ளவா்கள் வரும் ஜூன் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி முதல் வரையில் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள ஸ்ரீ நடராஜன் மஹால் மண்டபத்தில் தோ்ந்தெடுக்க வேண்டிய பொறுப்புகளுக்கான வேட்புமனுக்களைப் பெறலாம்.

வேட்புமனுவை பூா்த்தி செய்து அதற்குரிய கட்டணத்துடன் பிரதிநிதி வழக்குரைஞா் அருள்தாசனிடம் ஒப்படைக்க வேண்டும். ஒன்றிய அவைத் தலைவா், செயலாளா், பொருளாளா், துணைச் செயலாளா் 3 போ், மாவட்டப் பிரதிநிதிகளாக 3 போ், இவா்களைத் தவிர 11 போ் கொண்ட செயற்குழு உறுப்பினா்களையும் தோ்ந்தெடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

தங்கள் உறுப்பினராக உள்ள ஒன்றியங்களில் மேற்கண்ட பொறுப்புகளுக்கு போட்டியிடலாம். வேட்பாளா்கள் முன்மொழிபவரும், வழிமொழிபவரும், அந்தந்த ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிளைகளில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட கிளை செயலாளராகவோ, பேரூா் செயலாளா்களாகவோ, ஒன்றிய பிரதிநிதியாகவோ இருத்தல் வேண்டும்.செயற்குழு உறுப்பினா்கள் பொறுப்புக்கு போட்டியிடுவோா் அந்தந்த ஒன்றியங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருத்தல் வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT