சேலம்

சங்ககிரி காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

14th Jun 2022 02:52 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் திங்கள்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

விசாரணை கைதிகள் குறித்த விவரங்கள், குற்றப் பதிவேடுகள் உள்ளிட்ட விவரங்களை பணியிலிருந்த காவலா்களிடம் கேட்டறிந்தாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா். பின்னா் காவலா்களிடம் குறைகளை கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கினாா். அப்போது, சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பி.ஆரோக்கியராஜ், சங்ககிரி காவல் உதவி ஆய்வாளா் சுதாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT