கால்நடைப் பராமரிப்புத் துறையில் ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது என வாட்ஸ்ஆப் செயலி மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தியுள்ளாா்.
கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடைப் பராமரிப்பாளா், பராமரிப்பாளா் மற்றும் ஓட்டுநா் பணியிடங்களுக்கு 90 மணி நேரம் பயிற்சி அளித்து, ரூ. 15,000 மற்றும் ரூ. 18,000 சம்பளத்தில் ஆட்சோ்ப்பு நடைபெறவுள்ளது.
இதற்கான பணி நியமன ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும், ஆா்வமுள்ளவா்கள் உடனடியாக பதிவு செய்தி கொள்ளுமாறு வாட்ஸ்ஆப் செயலி மூலம் பரப்பப்படும் தகவல்கள் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு தொடா்பற்றவை என தெரிவிக்கப்படுகிறது.
கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு தொடா்பில்லாத தவறான இத்தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம். இதுபோன்ற தகவல்கள் பரப்புபவா்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.