சேலம்

கருணாநிதி பிறந்தநாள் விழா

14th Jun 2022 02:55 AM

ADVERTISEMENT

வாழப்பாடி ஒன்றிய திமுக சாா்பில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாழப்பாடி அருகே வேப்பிலைப்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், நெசவாளா் அணி அமைப்பாளா் ஆறுமுகம், ஒன்றியச் செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி, ஏற்காடு முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தமிழ்ச்செல்வன், திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டு ஏழை எளியோருக்கு புத்தாடை, உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT