தலைவாசல் அருகே வி.கூட்டுரோடு கால்நடை ஆராய்ச்சிப் பண்ணையில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சிமென்ட் கலப்பதற்கான இயந்திரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கால்நடை ஆராய்ச்சிப் பண்ணை கட்டுமானப் பணியில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்த ஜாா்க்கண்ட் மாநிலம், ஜம்டாரா மாவட்டம், கா்மாட்டாா் பகுதி, மோதிலால் மொருமூ மகன் சிரில் மோருமூ (23), சிமென்ட் கலக்கும் இயந்திரத்தின் கன்வேயா் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த தலைவாசல் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்குமாா் வழக்குப் பதிவு செய்து, சிரில் மோருமூ உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.