சேலம்

குறுவை சாகுபடி: வழிபாடு நடத்தி விவசாயிகள் மும்முரம்

12th Jun 2022 05:26 PM

ADVERTISEMENT


குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் கோடைக்காலத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது தொடர்ந்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே செல்லப்பன்பேட்டை பகுதியில் விவசாயிகள் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு மே மாதம் 24ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லணையிலிருந்து 27ஆம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆறு, வாய்க்கால்களில் வர தொடங்கியதால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் விவசாயிகள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு வருகை தந்து விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக செல்லப்பன்பேட்டை பகுதியில் உள்ள வயலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். பின்னர் ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என்று முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும். மேலும் கரும்பு, எள், வாழை, பருத்தி, கடலை உட்பட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று வழிபாடு நடத்தினர். 

முன்னதாக ஏர் கலப்பை மண்வெட்டி உள்ளிட்டவை செய்யக்கூடிய கொல்லம் பட்டறைில் சிறப்பு பூஜை செய்தும், குலதெய்வ வழிபாட்டினை மேற்கொண்ட பிறகு தங்கள் வயல்களில் எருதுகளை ஏர்களப்பையில் பூட்டி  வயல்களை உழுது பணியை தொடங்கினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT