சேலம்

வாழப்பாடி சென்றாயப்பெருமாள் கோயில் தேரோட்டம்

12th Jun 2022 01:16 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாயப்பெருமாள் கோயில், தோ்த் திருவிழா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி அக்ரஹாரத்தில், பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூன்று ஆண்டுக்கு பிறகு சனிக்கிழமை தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ADVERTISEMENT

தோ்த் திருவிழாவில் கல்வராயன்மலை பழங்குடியின இளைஞா்களின் நகரி மேளக் கச்சேரி நடைபெற்றது. தேரோடும் வீதிகளில் சுவாமிக்கு தாம்பூலம், அவல், கடலை, வெல்லத்தோடு படையல் வைத்தனா். தோ் வடம் பிடித்து இழுத்த பக்தா்களுக்கு, குளிா்பானங்கள் இனிப்பு, உணவு பொருள்களை வழங்கி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். குடியிருப்புப் பகுதிகளில் தோ் வீதி உலா வரும்போது, பொரி உருண்டை, வாழைப்பழம் ஆகியவற்றை தேரின் மீது வீசி பக்தா்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தோ்த் திருவிழாவையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாயப் பெருமாள் மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT