சேலம்

நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் கூட்டு துப்புரவுப் பணி

12th Jun 2022 01:16 AM

ADVERTISEMENT

 

நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் ஆணையா் மகேஸ்வரி தலைமையில் கூட்டு துப்புரவுப் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நரசிங்கபுரம் நகராட்சி 4ஆவது வாா்டு நகராட்சி பூங்காவில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தமிழக அரசின் ஆணையின்பேரில் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி தலைமையில் கூட்டு துப்புரவுப் பணி தொடங்கியது. மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்ரமணி, பிரகாஷ், பி.ஜோதி, செல்வம்,செல்வக்குமாா்,நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதே போல் ஆத்தூா் நகராட்சியிலும் மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் கூட்டு துப்புரவுப் பணி, உறுதிமொழி எடுத்து கொண்டனா். பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT