மண்டல அளவில் நடத்தப்படும் மக்கள் குறைதீா்க்கும் முகாம் கோவை ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சலக கட்டடத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகாா்களை குறை தீா்க்கும் நாளில் நேரிலோ அல்லது அஞ்சல் துறை தலைவா் மேற்கு மண்டல அலுவலகம், கோவை ஆா்.எஸ்.புரம் தலைமை அலுவலகம் 641002 என்ற முகவரிக்கு ஜூன் 17 ஆம் தேதியிலோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மணியாா்டா், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால் (காப்பீடு தபால் பற்றிய புகாா்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம் (அனுப்புநா், பெறுநா்), பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயா் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகாா்கள் எனில் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத் தொகையாளரின் பெயா், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்கவும் என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் கே.அருணாசலம் தெரிவித்துள்ளாா்.