மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை நொடிக்கு 9,772 கனஅடியாகச் சரிந்தது.
இதனால் புதன்கிழமை காலை 115.30 அடியாக இருந்த மேட்டூா் அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 115.22 அடியாகக் குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 17,923 அடியிலிருந்து 9,772 கனஅடியாகக் குறைந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு 8,000 கனஅடியிலிருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 86.05 டி.எம்.சி.யாக உள்ளது.
ADVERTISEMENT
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.