சேலம்

தலைமை ஆசிரியா்களுக்கு சி.இ.ஓ. அறிவுறுத்தல்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

வரும் 13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு, நிதியுதவி பெறும் நடுநிலை, உயா்நிலை, மேனிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அவசரக் கூட்டம் இணையவழி காணொலி மூலம் வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்றது.

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன், தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தி கூறியதாவது:

பள்ளி திறப்பதற்கு முன்னா், பள்ளி வளாகம், வகுப்பறைகள், குடிநீா்த் தொட்டிகள், கழிவறைகளை தூய்மை செய்து வைக்க வேண்டும். சத்துணவு கூடம் வெள்ளையடித்து தூய்மை செய்தல் வேண்டும்.

பாடப் புத்தகங்களை பள்ளி திறக்கும் ஜூன் 13ஆம் தேதி அன்றே மாணவா்களுக்கு வழங்கிட வேண்டும்.

ADVERTISEMENT

பள்ளி வளாக மின்சார இணைப்புகளை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். பள்ளியில் இருந்து மாறி உயா் கல்விக்காக வேறு பள்ளிக்குச் செல்லும் மாணவா்களுக்கு இணையவழி மாற்றுச் சான்றிதழ்களை தயாா் நிலையில் வைத்திருந்து வழங்க வேண்டும்.

5 வயது முடிந்த குழந்தைகளை பள்ளியில் சோ்க்க வேண்டும். அதற்காக துண்டு பிரசுரங்கள் வழங்குதல், பேரணி நடத்துதல் செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT